சுடச்சுட

  

  மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும், ஆசிரியருமான ஏ. வேலுவின் பெயர்ப் பலகைத் திறப்பு விழா மாப்படுகை ஊராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
  மயிலாடுதுறை வட்டம், மாப்படுகையைச் சேர்ந்தவர்  ஏ. வேலு. பி.ஏ. ஆங்கிலம் பயின்ற இவர், ஆசிரியராகப் பணியாற்றி விருப்பு ஓய்வு பெற்றவர். 1952-இல் மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர்.
  நாகை, திருவாரூர் மாவட்டங்களை உள்ளிடக்கிய அப்போதைய தஞ்சை மாவட்டத்தின் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர், மாயூரம் தாலுகா  ஆதிதிராவிட சமுதாய முன்னேற்றச் சங்கத் தலைவர், டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை தலைவர், இந்திய தேசிய கிராமிய விவசாயத் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.
  இவரது நினைவைப் போற்றும் வகையில், அவர் வாழ்ந்த வந்த மாப்படுகை ஊராட்சியில் அவரின் பெயர்ப் பலகைத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ஊராட்சித் தலைவர் எம்.பி.எம். பாலு விழாவுக்கு தலைமை வகித்து பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார். ஊராட்சித் துணைத் தலைவர் எம்.  பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai