சுடச்சுட

    

    நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு எம்.எல்.ஏ. பாராட்டு

    By DIN  |   Published on : 07th September 2016 07:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நல்லாசிரியர் விருது பெற்ற சீர்காழியை  அடுத்த மங்கைமடம் பள்ளி தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசுக்கு, சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவித்தார்.
    மங்கைமடம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி  தலைமை ஆசிரியர் எஸ். திருநாவுக்கரசுக்கு, தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை (நல்லாசிரியர் விருது) சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் வழங்கினார்.
    இந்நிலையில், நல்லாசிரியர் விருது பெற்ற திருநாவுக்கரசுக்கு, சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி செவ்வாய்க்கிழமை சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
    தொடர்ந்து, உதவி தொடக்கக் கல்வி அலுவலர்  ஐரீன்ஜெயராணி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி  அலுவலர் பூவராகன் ஆகியோரும் பாராட்டு தெரிவித்தனர். இதேபோல், அவருக்கு மங்கைமடம் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai