Enable Javscript for better performance
பேராலய ஆண்டுப் பெருவிழா: நாகை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை- Dinamani

சுடச்சுட

    

    பேராலய ஆண்டுப் பெருவிழா: நாகை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை

    By DIN  |   Published on : 07th September 2016 08:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேரலாய ஆண்டுப் பெருவிழாவையொட்டி,  வியாழக்கிழமை (செப். 8) நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா அலங்காரத் தேர் பவனி புதன்கிழமை இரவு நடைபெறுகிறது. மாதா பிறந்த நாள் வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது.
    இதையொட்டி, நாகை மாவட்டத்துக்கு செப். 8-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
    இந்த விடுமுறை செப். 17-ஆம் தேதி சனிக்கிழமையைப் பணி நாளாகக் கொண்டு ஈடு செய்யப்படும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai