சுடச்சுட

    

    நாகை மாவட்டம், குத்தாலம் அருகே மழையால் பயிர் சேதமடைந்ததால், மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    குத்தாலம் வட்டம், கடலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்வராஜ் (70). இவர் தனது மகள்  செல்வராணிக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் குறுவை சாகுபடி செய்திருந்தார்.
    காவிரியில் தண்ணீர் வராததால், அருகில் உள்ள பம்பு  செட்டுகளில் தண்ணீரைக் கடனாகப் பெற்று சாகுபடி  மேற்கொண்டார். அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையில் நனைந்து முற்றிலும் சேதமடைந்தன.
    மேலும், மழையால் சாய்ந்த பயிர்களை அறுவடை செய்ய முடியாததால் மனமுடைந்த செல்வராஜ், கடந்த சனிக்கிழமை விஷம் குடித்தார்.
    இதையறிந்த உறவினர்கள் அவரை மீட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அங்கு அவர் திங்கள்கிழமை இறந்தார். இதுகுறித்து செல்வராஜ் மகன் சேகர் அளித்த புகாரின்பேரில், குத்தாலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai