சுடச்சுட

    

    "மாணவர்களின் கனவுகளுக்கு வடிவம் கொடுப்பவர்கள் ஆசிரியர்களே'

    By DIN  |   Published on : 07th September 2016 07:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாணவர்களுடைய கனவுகளுக்கு வடிவம் கொடுக்கக் கூடிய திறமைகளை வளர்த்துக் கொண்டு, ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் த. ஆனந்த் கூறினார்.
    நாகை, பாப்பாக்கோவில் சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் த. ஆனந்த் தலைமை வகித்து பேசியது: வகுப்பறையில் கடைசி வரிசையில் உள்ள மாணவர்களின் திறமைகளையும் கண்டுபிடித்து, அவற்றை வெளியில் கொண்டுவரும் உந்து சக்தியாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதோடு, குழுவாக இருந்து மாணவர்களை வழி நடத்த வேண்டும். மாணவர்களின் வளர்ச்சிக்காகவும், அவர்கள் வாழ்க்கை மேம்படுவதற்காகவும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுடைய கனவுகளுக்கு வடிவம் கொடுக்கக் கூடிய திறமைகளை வளர்த்துக் கொண்டு ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என்றார்.
    விழாவில் அனைத்துக் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    ப்ரைம் கல்வி நிறுவனங்களில்...
    கீழ்வேளூர் ப்ரைம் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்வி நிறுவனங்களின் இயக்குநர் ஏ.வி. பாலு தலைமை வகித்தார். நிறுவனத் தலைவர் என். கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். இதில் சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்  ஜெகதீசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, சமுதாய நலனில் ஆசிரியர் பங்கு பற்றி சிறப்புரையாற்றினார்.
    நிகழ்ச்சியில் இயக்குநர்கள் பால்ராஜ், ராமதாஸ், கல்வியியல் கல்லூரி முதல்வர் பொன்னி, ஆசிரியர் பயிற்சி முதல்வர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai