Enable Javscript for better performance
வேதாரண்யம் அருகே விநாயகர் ஊர்வலத்தில் மும்மதத்தினர் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    வேதாரண்யம் அருகே விநாயகர் ஊர்வலத்தில் மும்மதத்தினர் பங்கேற்பு

    By DIN  |   Published on : 07th September 2016 08:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என மும்மதத்தினர் பங்கேற்ற மத நல்லிணக்க விநாயகர் ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    விநாயகர் சதுர்த்தியையொட்டி, கருப்பம்புலம் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சிற்றம்பலம் விநாயகர் கோயில் வழக்கமாக நடைபெறும் ஊர்வலத்துக்கான சிலை நிறுவப்பட்டு, ஒருவாரகால சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
    செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என மும்மதங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றனர். வேதாரண்யம் புனித அந்தோனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ஆதி ஆரோக்கியசாமி, தோப்புத்துறை ஜமாத் மன்றத்தைச் சேர்ந்த சுல்தான் ஆகியோர் பங்கேற்று, தேங்காய் உடைத்து  ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தனர்.
    மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராதாகிருஷ்ணன், கடிநெல்வயல் திருரெத்த ஆராதனை சபையின் அருட்சகோதரிகள், வேதாரண்யம் புனித பிரான்சிஸ் சலேசிய சபையின் சகோதரிகள், தோப்புத்துறை மற்றும் கோடியக்கரை முஸ்லிம் ஜமாத் மன்றங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர்.
    நிகழ்ச்சியில், மக்களவை முன்னாள் உறுப்பினர் பி.வி. ராசேந்திரன், நாலுவேதபதி ஊராட்சித் தலைவர் ஜி.கே. கனகராஜ், மருதூர் கணேசன், ஐ.என்.டி.யு.சி. தலைவர் குமரவேல், ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் எம்.ஆர். கணேசன், சமூக ஆர்வலர்  ஜோசப், கவிஞர் ஆ. வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகர் சிலை, கருப்பம்புலம் வடக்கு பகுதியில் உள்ள மருதம்புலம் ஏரியில் கரைக்கப்பட்டது. முன்னதாக, விநாயகர் சிலை முன்பு பெண்கள் கும்மியடித்து வழிபட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai