சுடச்சுட

  

  நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா அலங்காரத் தேர் பவனி புதன்கிழமை இரவு நடைபெறுகிறது.
  வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், கீழை நாடுகளின் லூர்து எனப் போற்றப்படும் புகழ்ப் பெற்ற தலம். இந்தப் பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த ஆக. 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது.
  ஆண்டுப் பெருவிழா நிகழ்ச்சிகளாக, பல்வேறு மொழிகளில் திருப்பணி நிறைவேற்றுதல், மறையுரை, சிலுவைப் பாதை நிறைவேற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
  ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்காரத் தேர் பவனி புதன்கிழமை இரவு நடைபெறுகிறது. தஞ்சாவூர் மறை மாவட்ட ஆயர் எம். தேவதாஸ் அம்புரோஸ் தேர் பவனியைத் தொடங்கி வைக்கிறார்.
  பேராலயத்தின் கொடியேற்றம், தேர் பவனி ஆகிய நிகழ்ச்சிகள் ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாகக் கருதப்படும். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளானோர் பாதயாத்திரையாக வருவது வழக்கம்.
  இதன்படி, புதன்கிழமை நடைபெறும் தேர் பவனியில் பங்கேற்பதற்காக பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கடந்த 2 நாள்களாக கணிசமாக உயர்ந்துள்ளது. திரளான பக்தர்களின் வருகையால் விழாக் கோலம் பூண்டுள்ளது வேளாங்கண்ணி.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai