சுடச்சுட

  

  அனைத்துக் கட்சியினரிடம் கருத்துக் கேட்புக் கூட்டம்

  By DIN  |   Published on : 08th September 2016 06:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வேதாரண்யத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் தொடர்பான அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற கருத்துக் கேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
  கூட்டத்தில், 2016- ஆம் ஆண்டுக்கான உள்ளாட்சித் தேர்தல் வாக்குச்சாவடிகள், வாக்கெடுப்புப் பகுதியின் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
  வேதாரண்யம் நகராட்சிப் பகுதியில் தற்போதைய விவரப்படி 13,248 பெண் வாக்காளர்கள் உள்பட 25,792 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு ஏற்கெனவே இருந்த 23 வாக்குச்சாவடிகள் சீரமைப்பின் அடிப்படையில் 34 வாக்குச்சாவடிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு பட்டியலில் தொடர்பான ஆட்சேபணைகள்,  கருத்துரைகளை செப். 9-ஆம் தேதிக்குள் நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் தெரிவிக்கலாம். நகர்மன்றக் கூட்ட அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் முகமது இப்ராகிம் தலைமை வகித்தார். மேலாளர் மீரா மன்சூர் முன்னிலை வகித்தார். வழக்குரைஞர் நமச்சிவாயம், நகர்மன்றத் துணைத் தலைவர்  சுரேஷ்பாபு, நகர அதிமுக செயலர் எஸ்.எம். எழிலரசு, அவைத் தலைவர் பழனிவேல், நகர திமுக செயலர் மா.மீ. புகழேந்தி, விடுதலைச் சிறுத்தைகள் நகர அமைப்பாளர் பன்னீர்செல்வம், நகரச் செயலர் சந்திரவேல் மற்றும் லட்சுமி சிவசண்முகம், புஷ்பலதா முருகையன், கார்த்திகேயன், குமரபாரதி உள்ளிட்ட நகர்மன்ற  உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai