சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தல்: நாகை மாவட்டத்தில் 2,344 வாக்குச்சாவடி மையங்கள்

    By DIN  |   Published on : 08th September 2016 06:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்காக 2,344 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்தார்.
    ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடி மையங்கள் அடங்கிய பட்டியலை நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி வெளியிட்டார். இதை மாவட்ட வருவாய்  அலுவலர் சி. முத்துமாரி பெற்றுக் கொண்டார்.
    அப்போது மாவட்ட ஆட்சியர் கூறியது:
    ஊரகப் பகுதிகளில் 1,000 வாக்களர்களும், நகர்ப்புறப் பகுதிகளில் 1,200 வாக்காளர்களும் உள்ள இடங்களில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கும்படி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, ஊரகப் பகுதிகளில் 1,991 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 2 ஆண் வாக்குச்சாவடிகள், 2 பெண் வாக்குச்சாவடிகள், 1,987 அனைத்து வாக்காளர் சாவடிகள் ஆகும். நகர்ப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள 226 வாக்குச் சாவடிகளில் 85 ஆண் வாக்குச் சாவடிகள், 85 பெண் வாக்குச் சாவடிகள், 56 அனைத்து வாக்காளர் சாவடிகள் ஆகும். பேரூராட்சிப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 127 வாக்குச்சாவடிகளில் 4 ஆண் வாக்குச் சாவடிகள், 4 பெண் வாக்குச் சாவடிகள், 119 அனைத்து வாக்காளர் சாவடிகள் ஆகும்.
    இந்த வாக்குச்சாவடி மையங்கள் அனைத்தும் 2011 உள்ளாட்சித் தேர்தலில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலேயே அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் வாக்குச்சாவடி மையங்கள் பழுது, போதுமான இடவசதி இல்லாதது உள்ளிட்ட காரணங்களில் ஊரகப் பகுதிகளில் 204 வாக்குச்சாவடிகளும், நகர்ப்புறப் பகுதிகளில் 16 வாக்குச்சாவடிகளும் அருகில் உள்ள கட்டடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
    வாக்குச்சாவடி பட்டியல் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்தப் பட்டியலை பார்வையிட்டு தங்கள் பகுதிக்கு எந்த இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்பதை அறியலாம் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai