சுடச்சுட

  

  ஊரக கோழி வளர்ப்புத் திட்டத்தில் பயனடைய மகளிர் விண்ணப்பிக்கலாம்

  By DIN  |   Published on : 08th September 2016 06:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகை மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள ஊரக கோழி வளர்ப்புத் திட்டத்தில் பயனடைய மகளிர் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  ஊரகப் பகுதிகளில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மகளிருக்கு உபரியாக கூடுதல் வருமானம் கிடைக்க வழிவகை செய்யும் வகையில், மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் ஊரக கோழி வளர்ப்புத் திட்டம் நாகை மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ளது.
  இத்திட்டத்தில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் பொதுப் பிரிவினர் 90 பேருக்கும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 20 பேருக்கும் திட்ட உதவிகள் வழங்கப்படும். விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு கோழி வளர்ப்பு குறித்து ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடித்த பயனாளிகளுக்கு 4 வார வயதுடைய, ரூ. 50 மதிப்புடைய 20 நாட்டுக் கோழிகள் 100 சதவீத மானியத்தில் (விலையில்லாமல்) வழங்கப்படும். இரவு நேர பாதுகாப்புக் கூண்டு வாங்குவதற்காக ரூ. 1,500 ரொக்கப் பணம் வழங்கப்படும்.
  இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த தகுதியான பெண்கள், தங்கள் பகுதியில் உள்ள புதுவாழ்வுத் திட்டத் துறை அலுவலர்களிடம் கூடுதல் விவரங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம். அல்லது மகளிர் திட்ட அலுவலர்களிடம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai