சுடச்சுட

  

  திருமருகல் அருகேயுள்ள  திருக்கண்ணபுரத்தில் நாகை மாவட்ட கண் பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் சார்பில் கண் தான விழிப்புணர்வு வார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  தேசிய கண் தான விழிப்புணர்வு இருவார விழா ஆக. 25 முதல் செப். 8 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரிமா சங்கம், நாகை மாவட்ட கண் பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியவை சார்பில், மாணவர்களுக்கு கண் தான விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டன.
  விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கே.பி. அன்பழகன் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஏ. அன்பானந்தன், பள்ளி வளர்ச்சிக் குழுத் தலைவர் என்.எஸ். தியாகராஜன் பங்கேற்றனர்.
  இதில் திருமருகல் வட்டார மருத்துவ அலுவலர் கே. ரூபா, திருக்கண்ணபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் எம். வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai