Enable Javscript for better performance
கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்: வைகோ- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்: வைகோ

    By DIN  |   Published on : 08th September 2016 06:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.
    நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
    காவிரி நீர் பிரச்னையில் இதுநாள் வரை, நீதிமன்ற தீர்ப்பு எதையும் கர்நாடகம் செயல்படுத்தியதில்லை. காவிரி நதிநீர் பங்கீடு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பையடுத்து, அங்கு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சிலரின் தூண்டுதலால் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இந்நிலையில், கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நதிநீர் பிரச்னையை தமிழக அரசு சட்டப்பூர்வமாகவே அணுகி வருவது ஏற்புடையதாகும். தமிழக முதல்வர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, தில்லியில் அதிர்வலையை  ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் நிலையை உணரும். வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் நலக் கூட்டணி தொடரும்  என்றார் வைகோ. நாகை மாவட்ட மதிமுக செயலர் ஏ.எஸ். மோகன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் மா. மகாலிங்கம், இளைஞரணி மாநில துணை அமைப்பாளர் இ. மார்கோனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai