Enable Javscript for better performance
சீர்காழி அரசு மருத்துவமனையில் எம்.பி. ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    சீர்காழி அரசு மருத்துவமனையில் மக்களவை உறுப்பினர் ஆர்.கே. பாரதிமோகன் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
    சீர்காழியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் நாள்தோறும் 1500-க்கும் மேற்பட்டவர்கள் உள் மற்றும் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். அரசு மருத்துவமனைக்கு தற்போது தனியார் நிதி உதவியோடு 100 மின் விளக்குகள், 50 எல்.இ.டி பல்புகள், 50 மின் விசிறிகள் ஆகியவை வழங்கப்பட்டு, ஒவ்வொரு வார்டுகளிலும் பொருத்தும் பணி நடைபெறுகிறது.
    மருத்துவமனை வளாகத்தில் மழைக்காலங்களில் மழைநீரும், கழிவுநீரும் தேங்கி நின்று சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று கழிவுநீரை வெளியேற்றி இனி தேங்காத வகையில் அப்பகுதியில் லாரிகளில் மணல் கொட்டப்பட்டு சமன் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
    இந்நிலையில், சீர்காழி அரசு மருத்துவமனைக்கு மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் ஆர்.கே. பாரதிமோகன் செவ்வாய்க்கிழமை  வந்தார்.
    உள், புறநோயாளிகள் பிரிவு அறைகள், மகளிர் மற்றும் குழந்தைகள் பிரிவு அறைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சீர்காழி மருத்துவமனைக்கு ரத்த வங்கி, குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர். பின்னர், மருத்துவமனை வளாகத்தில் மண் கொட்டப்படும் பணிகளை பார்வையிட்டார்.
    ஆய்வின்போது, சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி, பேரூர் கழகச் செயலர் போகர் ரவி, தொழிலதிபர் ரமேஷ்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai