Enable Javscript for better performance
மயிலாடுதுறையில் கோயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    மயிலாடுதுறையில் அபயாம்பிகை  உடனுறை மயூரநாதர் கோயிலுக்குச் சொந்தமான  இடத்தில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
    மயிலாடுதுறை துலாக்கட்டக் காவிரி கரையில்,  அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் கோயிலுக்குச்  சொந்தமான இடம் உள்ளது.
    இந்த இடத்தில் 63 கடைகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. இதில் 1040 சதுர அடி கொண்ட ஒரு கடையை குத்தகைக்கு எடுத்த மயிலாடுதுறையைச்  சேர்ந்த வி.ஜி. ராமகிருஷ்ணன், 1998 முதல், கோயில் நிர்வாகத்துக்கு குத்தகை செலுத்தவில்லையாம். இதனால், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகத்தினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
    இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் டி. கஜேந்திரன், உதவி ஆணையர் சு. ஞானசேகரன், மயிலாடுதுறை வட்டாட்சியர் காந்திமதி ஆகியோரது முன்னிலையில் மயூரநாதர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
    திருவாவடுதுறை ஆதீனம் பொது மேலாளர்  சுப்பிரமணியன், மயூரநாதர் கோயில் கண்காணிப்பாளர் எஸ். குருமூர்த்தி, இந்து சமய அறநிலையத்துறை  ஆய்வாளர்கள் ஏ. உத்திராபதி, கு.ப. ரவி, கோ.  ரவி, செயல் அலுவலர் காமராஜ், கிராம நிர்வாக  அலுவலர் திருமலைசங்கு மற்றும் வருவாய்த்துறையினர், மயூரநாதர் கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மேற்கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai