சுடச்சுட

    

    மயிலாடுதுறையில் திமுக பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    தமிழக சட்டப்பேரைவயில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில் நகர திமுக சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலர் குண்டாமணி (எ) என். செல்வராஜ் தலைமை வகித்தார். நகர அவைத் தலைவர் பி.எஸ். குமார், துணைச் செயலாளர்கள் ஆர்.கே. சங்கர், வை. தெய்வநாயகம், நகரப் பொருளாளர் எம். பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கட்சியின் பேச்சாளர் ஆர்.டி. சபாபதிமோகன், நாகை மாவட்டச் செயலர் நிவேதா எம். முருகன், முன்னாள் எம்எல்ஏ கி. சத்தியசீலன், செம்பனார்கோயில் ஒன்றியச் செயலர்  எஸ்.எம். முசாகுதீன், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர்  ஆர். மனோகரன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் மகா. அலெக்ஸாண்டர் ஆகியோர் பேசினர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai