Enable Javscript for better performance
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா: அலங்காரத் தேர் பவனி: லட்சக்கணக்கானோர் திரண்டனர்- Dinamani

சுடச்சுட

    

    வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா: அலங்காரத் தேர் பவனி: லட்சக்கணக்கானோர் திரண்டனர்

    By DIN  |   Published on : 08th September 2016 08:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா அலங்காரத் தேர் பவனி புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானோர் திரண்டதால், வேளாங்கண்ணி விழாக்கோலம் பூண்டிருந்தது.
    நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், கீழை  நாடுகளின் லூர்து எனப் போற்றப்படும் புகழ்ப் பெற்ற தலம். இந்தப் பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா ஆக. 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது.
    ஆண்டுப் பெருவிழா நிகழ்ச்சிகளாக, பல்வேறு மொழிகளில் திருப்பணி நிறைவேற்றுதல், மறையுரை, சிலுவைப் பாதை நிறைவேற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்காரத் தேர் பவனி புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. தஞ்சாவூர் மறை மாவட்ட ஆயர் எம். தேவதாஸ் அம்புரோஸ், புனிதம் செய்து தேர் பவனியைத் தொடங்கி வைத்தார். ஆரோக்கிய மாதா பெரிய தேரில் எழுந்தருளியதும், மிக்கேல் சம்மனசு, செபஸ்தியார், அந்தோனியார், சூசையப்பர், உத்திரிய மாதா, ஆரோக்கிய மாதா ஆகியோர் சிறிய தேர்களில் எழுந்தருளினர். தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்து, பின்னர் பேராலய முகப்பை அடைந்தது. தேர்பவனியை காண, தமிழகம் மற்றும் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோர் வந்திருந்தனர்.
    ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai