Enable Javscript for better performance
100 நாள் வேலைத் திட்ட ஊதியத்தை வழங்கக் கோரி சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    100 நாள் வேலைத் திட்ட ஊதியத்தை வழங்கக் கோரி சாலை மறியல்

    By DIN  |   Published on : 08th September 2016 06:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான ஊதியத் தொகையை வழங்கக் கோரி, சிக்கல் கடைவீதியில் புதன்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

    சிக்கல், பனைமேடு உள்ளிட்ட பகுதிகளில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றிய விவசாயக் கூலித்தொழிலாளர்களுக்கு, கடந்த 3 மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், மத்திய அரசு அறிவித்தபடி ரூ. 203 ஊதியமாக வழங்கக் கோரியும் திருவாரூர் சாலையில் இந்த மறியல் நடைபெற்றது. இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு ஒன்றிய துணைத் தலைவர் ஆர். விமலா தலைமை வகித்தார்.
    தகவலறிந்த அதிகாரிகள் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் திருவாரூர் - நாகை சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    மயிலாடுதுறை அருகே சாலை மறியல்: மயிலாடுதுறை அருகே கிராம மக்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம், சோழம்பேட்டை ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றிய விவசாயக் கூலித்தொழிலாளர்களுக்குரிய ஊதியத் தொகை கடந்த 3 மாதங்களாக  வழங்கப்படவில்லை. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலர் மாசிலாமணி தலைமையில், அண்ணாசிலை அருகே ஒன்றிணைந்த கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்தவர்களுக்கு அதற்குரிய ஊதியத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் மற்றும்  சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மயிலாடுதுறை - கல்லணை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த மயிலாடுதுறை காவல் துணைக் கண்காணிப்பாளர் கலிதீர்த்தான், வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானசெல்வி மற்றும் போலீஸார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai