Enable Javscript for better performance
37 ஊராட்சிகளுக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    சீர்காழி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட  37 ஊராட்சிகளின் வரைவு வாக்காளர் பட்டியல்  புதன்கிழமை வெளியிடப்பட்டன.
    நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி  உத்தரவின்பேரில், 2016-ஆம் ஆண்டின் சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 37 ஊராட்சிகளில்  அமையப்படவுள்ள 188 வாக்குச்சாவடி  மையங்களுக்கான வரைவு வாக்காளர் பட்டியல்  பொதுமக்கள் பார்வைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் வெளியிட்டார். ஒன்றிய அலுவலகத்தில் உள்ள தகவல் பலகையில் பட்டியல் ஒட்டப்பட்டுள்ளது.
    இதுகுறித்து ரவிச்சந்திரன் கூறியது:
    37 ஊராட்சிகளில் அமையப்படவுள்ள 188 வாக்குச்சாவடி மையங்களுக்கான வாக்காளர் வரைவு  பட்டியல் அந்தந்த ஊராட்சிகளில் பொதுமக்கள்  பார்வைக்காக வைக்கப்படவுள்ளது. இதில் ஏதேனும்  மறுப்புரை, கருத்துரை இருப்பின் அதை வரும் 9-ஆம்  தேதிக்குள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்கலாம் என்றார்.
    அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்)  விஜயலட்சுமி, மேலாளர் சசிக்குமார்,
    ஒன்றியப்  பொறியாளர் கனகராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai