Enable Javscript for better performance
குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காண கூடுதலாக ஆழ்துளை கிணறு அமைக்கநாகை எம்.எல்.ஏ கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காண கூடுதலாக ஆழ்துளை கிணறு அமைக்க நாகை எம்.எல்.ஏ கோரிக்கை

    By DIN  |   Published on : 09th September 2016 06:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை தொகுதியில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டுக்குத் தீர்வு காணும் வகையில், கொள்ளிடம் கூட்டு குடிநீர்த் திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு ஆழ்துளை கிணறு அமைக்க நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம். தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்துள்ளார்.
    நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் அண்மைக்காலமாக குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுதொடர்பாக, நாகை  தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம். தமிமுன் அன்சாரி,  நாகை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகத்திடம் ஆலோசனை மேற்கொண்டார்.
    அப்போது, நாகை நகராட்சிக்கு 55 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்க வேண்டிய நிலையில், தற்போது 18 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைப்பதாகவும், குறைந்தபட்சம் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைத்தால் கூட குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்கலாம் எனத் தெரியவந்தது.
    இந்நிலையில், வியாழக்கிழமை சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியைச் சந்தித்த அவர், நாகை நகராட்சிப் பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்னையைத் தீர்க்கக் கோரி மனு அளித்துள்ளார்.
    இந்த மனுவில், நாகை நகராட்சிக்கு உரிய அளவு தண்ணீர் வழங்க வேண்டும், குடிநீர்ப் பற்றாக்குறையை சமாளிக்க கொள்ளிடம் ஆற்றில் கூடுதலாக ஒரு ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும், கூடுதல் இழுவை திறன் கொண்ட மோட்டார்களைப் பொருத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்ததாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai