Enable Javscript for better performance
குத்தாலம் பகுதியில் 4 கோயில்கள் குடமுழுக்கு- Dinamani

சுடச்சுட

    

    குத்தாலம் பகுதியில் ஒரே நாளில் 4 கோயில்களில் வியாழக்கிழமை  குடமுழுக்கு நடைபெற்றது.
    ஸ்ரீபிரசன்ன மாரியம்மன் கோயில் குடமுழுக்கு: குத்தாலம் வட்டம், மேக்கிரிமங்கலம் கிராமம் கோ.சி. மணி நகரில் ஸ்ரீபிரசன்ன மாரியம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
    இதை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.
    வியாழக்கிழமை, ஸ்ரீபிரசன்ன மாரியம்மன் கோயில் விமான கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி, ராஜமோகன் சிவாச்சாரியார் குடமுழுக்கு செய்துவைத்தார்.
    இதில் முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி, ஊராட்சி மன்றத் தலைவர் மகேந்திரன், மருத்துவர்கள் கோ.சி. மதி, திருமாவளவன், இரா. செல்வம், கிராம நாட்டாண்மைகள் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.
    ஸ்ரீகுஞ்சல விநாயகர் கோயில் குடமுழுக்கு: மாதிரிமங்கலம் கிராமம் புதுத்தெருவில் ஸ்ரீகுஞ்சல விநாயகர், ஸ்ரீவள்ளி தேவசேனா உடனுறை ஸ்ரீசுப்ரமணிய சுவாமி, ஸ்ரீசப்த கன்னிகையம்மன், ஸ்ரீசாட்டைக்காரன் கோயில்களின் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
    இதை முன்னிட்டு, திங்கள்கிழமை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. வேத விற்பன்னர்கள் வேதங்களை முழங்க ஸ்ரீகுஞ்சல விநாயகர், ஸ்ரீவள்ளி தேவசேனா உடனுறை ஸ்ரீசுப்ரமணிய சுவாமி விமான கலசங்களுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும்  வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
    இந்த குடமுழுக்குகளை மயூரநாத வாமதேவ சிவாச்சாரியார் செய்துவைத்தார். இதில் கிராம நாட்டாண்மைகள் செ. ராஜேந்திரன், செந்தில்குமார், சுந்தரலிங்கம் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.
    ஸ்ரீஈசான்ய கணபதி கோயில் குடமுழுக்கு:
    குத்தாலம் உத்திர வடக்கு வீதியில் உள்ள  ஸ்ரீஈசான்ய கணபதி கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
    புதன்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள்  தொடங்கின.
    வியாழக்கிழமை, ஸ்ரீஈசான்ய கணபதி கோயில் விமான கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி,  உமாபதி சிவாச்சாரியார் குடமுழுக்கு செய்துவைத்தார்.
    விழா ஏற்பாடுகளை கிராம  நாட்டாண்மைகள் மா. மகாலிங்கம்,  வைத்தியநாதன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
    ஸ்ரீமகா சக்தி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு: செம்பியன்கோமல் கிராமம் உத்திர வடக்கு வீதியில் உள்ள ஸ்ரீவிநாயகர், சப்த கன்னிகள், ஸ்ரீமகா சக்தி மாரியம்மன்  கோயில்களின் குடமுழுக்கு விழா  வியாழக்கிழமை நடைபெற்றது.
    புதன்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகளுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
    அகோரமூர்த்தி சிவாச்சாரியார் தலைமையில், குருமூர்த்தி சிவாச்சாரியார்,  சுப்ரமணிய சிவாச்சாரியார், தங்கதுரை  பூசாரி உள்ளிட்டோர் வியாழக்கிழமை குடமுழுக்கு செய்துவைத்தனர்.
    விழா ஏற்பாடுகளை கிராம நாட்டாண்மைகள் லட்சுமணன், குமார்,  மோகன்ராஜ், மாதவன் உள்ளிட்டோர்  செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai