சுடச்சுட

    

    சுற்றுச்சூழல், கடலோரப் பகுதிகளின் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பாய்மர படகு பயணம் மேற்கொண்டுள்ள தேசிய மாணவர் படை குழுவினர் நாகையிலிருந்து புதுச்சேரிக்கு வியாழக்கிழமை பயணமாகினர்.
    சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடலோரப் பகுதிகளின் தூய்மைப் பராமரிப்பு, மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புதுச்சேரி தலைமை தேசிய மாணவர் படையின் 30 மாணவர்கள் பாய்மர படகு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
    புதுச்சேரியிலிருந்து செப். 1-ஆம் தேதி பயணத்தைத் தொடங்கிய இந்தக் குழுவினர்,   சிதம்பரம், பழையார், பூம்புகார் ஆகிய பகுதிகளில் ஓரிரு நாள்கள் தங்கியிருந்து, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் மாசு குறித்த விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டனர். இக்குழுவினர், புதன்கிழமை மாலை நாகை வந்தடைந்தனர். நாகை கடற்படை அதிகாரி சாதிக் பாஷா வரவேற்றார். நாகை துறைமுகத்தில் தங்கியிருந்த இந்தக் குழுவினர் வியாழக்கிழமை காலை நாகையிலிருந்து புதுச்சேரிக்குப் பயணத்தைத் தொடங்கினர். நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம். துரை, வியாழக்கிழமை காலை கொடி அசைத்துப் பயணத்தைத் தொடங்கி வைத்தார்.
    சுகாதாரம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வலியுறுத்தும் நோக்கில் பயணப்பட்டுள்ள இந்தக் குழுவினர், பாய்மர படகு மூலம் 336 கி.மீ. தொலைவு பயணத்தை இலக்காகக் கொண்டு பயணத்தில் ஈடுபட்டுள்ளனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai