சுடச்சுட

  

  மயிலாடுதுறையில் ஸ்ரீகுபேர சாய்பாபா கோயில் குடமுழுக்கு

  By DIN  |   Published on : 09th September 2016 06:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மயிலாடுதுறை வட்டம், பட்டமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட பேச்சாவடி சக்திவேல் மெளன  சுவாமிகள் திருமட வளாகத்தில் புதிதாகக்  கட்டப்பட்டுள்ள ஸ்ரீகுபேர சாய்பாபா கோயிலின்  குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

  இக்கோயிலின் திருப்பணிகள் கடந்த ஆண்டு, ஸ்ரீலஸ்ரீ  சக்திவேல் சதாசிவ சுவாமிகள் அருளாசியுடன்  தொடங்கியது. உபயதாரர்கள் மற்றும் பக்தர்களின் பங்களிப்புடன் திருப்பணிகள் நிறைவு பெற்றது. பின்னர் குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள்  செய்யப்பட்டு, 7-ஆம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி பூஜைகளுடன்  குடமுழுக்கு விழா நிகழ்ச்சிகள் தொடங்கின.
  தொடர்ந்து கோயிலில் நடைபெற்ற யாகசாலை  பூஜைகள், சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன. குடமுழுக்கு விழா நாளான வியாழக்கிழமை  அதிகாலை முதல் நடைபெற்ற பூஜைகளுக்குப் பின்னர்  காலை 9 மணிக்கு யாத்ராதானமும், கடம் புறப்பாடும்   நடைபெற்றன. தொடர்ந்து, காலை 10 மணிக்கு கோயில் விமானத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு, குடமுழுக்கு விழா நடைபெற்றது. இவ்விழாவில், மயிலாடுதுறை மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சாய்பாபா பக்தர்கள் பங்கேற்று  வழிபாடு மேற்கொண்டனர். குடமுழுக்கு விழாவில், ஸ்ரீலஸ்ரீ சக்திவேல் சதாசிவ மெளன சுவாமிகள் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அருளாசி வழங்கினார்.
  விழாவுக்கான ஏற்பாடுகளை உபயதாரர்கள் ஆர். ஜெனார்த்தனம், ஏசிடி. செந்தில்குமார் குடும்பத்தினர்  மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai