சுடச்சுட

    

    மயிலாடுதுறையைச் சேர்ந்த ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது

    By DIN  |   Published on : 09th September 2016 06:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மயிலாடுதுறையைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் ஜெக. மணிவாசகம், தமிழக அரசால் வழங்கப்படும் நல்லாசிரியர் விருதைப்   பெற்றுள்ளார்.
    மூவலூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் ஜெக. மணிவாசகம். இவரது கல்விப் பணியைப் பாராட்டி செப்டம்பர் 5-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், தமிழக அரசால் வழங்கப்படும் நல்லாசிரியர் விருது (டாக்டர் ராதா
    கிருஷ்ணன் விருது) வழங்கப்பட்டது.
    பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் த. சபிதா, இயக்குநர் ச. கண்ணன் ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் க. பாண்டியராஜன், தலைமை ஆசிரியர் ஜெக. மணிவாசகத்துக்கு விருதை வழங்கினார். விருது பெற்ற ஆசிரியருக்கு, மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் ஆர்.கே. பாரதிமோகன், சட்டப்பேரவை உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு  தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலர் க. மீனாட்சிசுந்தரம் மற்றும் பல்வேறு அமைப்பினர், ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
    மயிலாடுதுறையில் வரவேற்பு: மயிலாடுதுறைக்கு புதன்கிழமை வந்த ஜெக. மணிவாசகத்துக்கு, பொதுத் தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர், ரயில் நிலையத்தில் வரவேற்பு அளித்தனர்.
    பொதுத் தொழிலாளர் சங்கத் தலைவர் ஜெகவீரபாண்டியன், செயலர் அப்பர் சுந்தரம், பொருளாளர் சுவாமிநாதன், ஆசிரியர் மன்றத்தின் ஒன்றிய நிர்வாகிகள் துரை, சுரேஷ், நகரச் செயலர் மணிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai