சுடச்சுட

  

  நாகையில் உள்ள இந்திய குழந்தைகள் நலச் சங்க அலுவலகத்தில் பொருள்கள் திருட்டுபோன சம்பவம் குறித்து  போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர்.
  நாகை அருகேயுள்ள அந்தனபேட்டை, காளியம்மன் கோயில் தெருவில் இந்திய குழந்தைகள் நலச் சங்கக் கட்டடம் உள்ளது. இதன் திட்ட அலுவலராக திருவாரூரில் வசிக்கும் நித்யானந்தம் (46) உள்ளார். 2005 முதல் இயங்கி வரும் இந்த சங்கம், தத்தெடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள் பற்றிய விவரங்களை சேகரித்து உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் பணியை செய்து வருகிறது.
  இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த அலுவலகத்தை நித்யானந்தம் பூட்டிவிட்டு, அப்பகுதியைச் சேர்ந்த சகுந்தலை (60) என்பவரிடம் சாவியை கொடுத்துச் சென்றாராம்.
  இந்நிலையில், கடந்த 4 ஆம் தேதி  அலுவலகத்துக்கு நித்யானந்தம் வந்தபோது, அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த  மானிட்டர், யுபிஎஸ், சார்ஜர், டிஜிட்டல் கேமரா உள்ளிட்ட பொருள்கள் திருட்டு போனது  தெரியவந்தது.
  இதுகுறித்து நித்யானந்தம் அளித்த புகாரின் பேரில், நாகை நகரப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai