சுடச்சுட

  

  உதவித்தொகை பெற்றுத் தருவதாக பெண்ணை ஏமாற்றியவர் மீது வழக்கு

  By DIN  |   Published on : 10th September 2016 08:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகப்பட்டினத்தில் உதவித்தொகை பெற்றுத் தருவதாகக் கூறி, பெண்ணை ஏமாற்றிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
  நாகை, வடக்குநல்லியான் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி சரோஜா (24). இவர்களது மகள் முத்துலட்சுமி (6), மூளை வளர்ச்சியின்மையால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு உதவித்தொகை ரூ. 1500, கடந்த 6 மாதங்களாக கிடைத்ததாம். இந்நிலையில், கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு குழந்தை முத்துலட்சுமி இறந்தது. இதனால், அரசு சார்பில் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை நிறுத்தப்பட்டது.
  இதுகுறித்து புகார் அளிப்பதற்காக சரோஜா, செவ்வாய்க்கிழமை (செப். 6) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தாராம். அங்கு ஒருவர் சரோஜாவிடம், தன்னுடைய பெயர் குமார் எனவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தான் பணிபுரிவதாகவும் கூறியுள்ளார்.அத்துடன் நல வாரிய உதவித்தொகை பெற்றுத் தருவதாகக் கூறி வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை ஆகியவைகளின் நகல், ரூ. 15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றையும், சரோஜா வைத்திருந்த 2 செல்லிடப்பேசிகளையும் வாங்கிச் சென்றாராம். நீண்டநேரமாக அந்த நபர் வராததால், தான் ஏமாற்றப்பட்டதை சரோஜா உணர்ந்துள்ளார்.
  இதுகுறித்த புகாரின் பேரில், நாகூர் போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai