சுடச்சுட

  

  குத்தாலம் வட்டத்தில் 3 கிராமங்களில்  வாராந்திர மனுநீதி முகாம் வெள்ளிக்கிழமை   நடைபெற்றது.
  இதில் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் கலந்துகொண்டு குடும்ப அட்டை பெயர் சேர்த்தல், வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டை பெயர்  சேர்ப்பு மற்றும் பெயர் நீக்கம், பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற விண்ணப்பங்களை பரிசீலனை செய்து பெற்றுக் கொண்டனர். இதில் தகுதியுடைய மனுக்கள் உடன் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தகுந்த ஆவணங்கள் இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
  குத்தாலம் வருவாய்க் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் வட்டாட்சியர் இந்துமதி, மண்டல துணை  வட்டாட்சியர் முருகானந்தம், வருவாய் ஆய்வாளர்  சதீஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் ஜெயராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
  காஞ்சிவாய் வருவாய்க் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் விஜயராகவன், வருவாய் ஆய்வாளர் கவிதாஸ்,  கிராம நிர்வாக அலுவலர் செளமியா, ஊராட்சி மன்றத் தலைவர் தமிழரசி ஆகியோர் கலந்துகொண்டனர்.
  தத்தங்குடி வருவாய்க் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் ராகவன், வருவாய் ஆய்வாளர்கள் ராஜேந்திரன், மூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் சந்திரசேகரன், பிரகாஷி,  ஊராட்சி மன்றத் தலைவர் இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai