Enable Javscript for better performance
செப். 11, 25-இல் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    செப். 11, 25-இல் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

    By DIN  |   Published on : 10th September 2016 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தலுக்கான சிறப்பு முகாம் வாக்குச்சாவடி மையங்களில் செப். 11 மற்றும் செப். 25 ஆகிய தேதிகளில் நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, செப். 11, 25 ஆகிய தேதிகளில், நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் மற்றும் முகவரி மாற்றம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
    திருத்தம் மேற்கொள்ள விரும்புபவர்கள், உரிய படிவத்தில் விண்ணப்பித்து வாக்குச்சாவடி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அயல்நாடு வாழ் இந்தியர்கள் விண்ணப்பப் படிவம் 6-ஏ-ஐ நேரில் அல்லது அஞ்சலில் வாக்குப் பதிவு அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பப் படிவத்துடன், கடவுச் சீட்டு நகல்களை இணைத்து அளிக்க வேண்டும். இருப்பினும், இந்த விண்ணப்பப் படிவத்தை சிறப்பு முகாம்களில் வழங்கக் கூடாது.
    அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்கள் செப். 25-ஆம் தேதி வரை கோரிக்கைகள் மற்றும் மறுப்புரைகளை நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வழங்கலாம். முகவர்கள் 10 மனுக்களுக்கு மிகாமல் வழங்க வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில்
    தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai