Enable Javscript for better performance
தினமணி செய்தி எதிரொலி: ஒளிரும் உயர் கோபுர மின்விளக்கு- Dinamani

சுடச்சுட

    

    தினமணி செய்தி எதிரொலி: ஒளிரும் உயர் கோபுர மின்விளக்கு

    By DIN  |   Published on : 10th September 2016 08:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் அருகில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு  மீண்டும் ஒளிரத் தொடங்கியுள்ளது.
    நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் அருகில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு சில நாள்களாக எரியாமல் இருந்தது. இதுகுறித்து தினமணி ஆராய்ச்சி மணியில் செய்தி வெளியாகியது. இந்தச் செய்தி நாகை சட்டப்பேரவை உறுப்பினர் எம். தமிமுன் அன்சாரி கவனத்துக்குச் சென்றது. இதையடுத்து, அவர் நகராட்சி ஆணையர் ஜான்சனை தொடர்பு கொண்டு, உயர் கோபுர மின்விளக்கு பழுது குறித்து தெரிவித்து, உடனடியாக சரி செய்யும்படி கேட்டுக் கொண்டார்.
    இதனால் நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் அருகில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு பழுது நீக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை முதல் எரிகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai