சுடச்சுட

    

    மகளிர் கல்லூரியில் பாரம்பரிய உணவு செய்முறை விளக்கக் கருத்தரங்கம்

    By DIN  |   Published on : 10th September 2016 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீர்காழி விவேகானந்தா  மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரம்பரிய உணவும், மகளிர் நலனும் என்ற தலைப்பில் கருத்தரங்கமும்,  செய்முறை விளக்கமும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர், கே.வி. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். இயக்குநர் அனிதா ராதாகிருஷ்ணன், அறக்கட்டளை தலைவர் எஸ். ரெங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    இதில் சென்னை எத்திராஜ்  கல்லூரி ஊட்டச்சத்து மற்றும் சத்துணவியல் துறை பேராசிரியர் மேனகா பங்கேற்று பாரம்பரிய இயற்கை உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து கருத்துரை வழங்கினார்.
    தொடர்ந்து, பாரம்பரிய உணவு வல்லுநர் மலர்க்கொடி சின்னையன் பங்கேற்று, மாணவிகளுக்கு கைகுத்தல் அரிசி சாப்பாடு, குதிரைவாலி, திணை பாயசம், வரகு கொலுக்கட்டை, சாமை  ஆகிய இயற்கை உணவு  தானியங்களைக் கொண்டு  சமைத்து செயல்விளக்கம் அளித்தார்.
    தொடர்ந்து பங்கேற்ற மாணவிகள்  1000-க்கும் மேற்பட்டவர்களுக்கு  திணை பாயசம், முளைகட்டிய தானிய பயறு, சுண்டல்  வழங்கப்பட்டன. இதில் கரு. முத்து, அபாஸ் அலி, துணை முதல்வர்  ஜெயந்திகிருஷ்ணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    கல்லூரி முதல்வர் கே. ராமகிருஷ்ணன் வரவேற்றார். நலம்  பாரம்பரிய அறக்கட்டளை செயலர் ரா. சுதாகர் நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai