Enable Javscript for better performance
100 நாள் வேலைத் திட்ட ஊதியத்தை வழங்கக் கோரி சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    100 நாள் வேலைத் திட்ட ஊதியத்தை வழங்கக் கோரி சாலை மறியல்

    By DIN  |   Published on : 10th September 2016 08:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான ஊதியத் தொகையை வழங்கக் கோரி, ஆவராணி புதுச்சேரி கடைவீதியில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.
    ஆவராணி, புதுச்சேரி, ஆலங்குடி ஆகிய ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றிய விவசாயக் கூலித்தொழிலாளர்களுக்கு, கடந்த 3 மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
    மத்திய அரசு அறிவித்த சட்டக்கூலி ரூ. 203-ஐ வழங்க வேண்டும். இப்பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும். முதியோர் உதவித்தொகை கேட்டு மனு செய்தவர்களுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆவராணி புதுச்சேரி கடைவீதியில் சாலை மறியல் நடைபெற்றது.
    அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு எஸ். அமுதா, என். சாந்தி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் மாநில துணைத் தலைவர் ஜி. கலைச்செல்வி பங்கேற்று, கோரிக்கைகள் குறித்து பேசினார்.
    தகவலறிந்த அரசு அதிகாரிகள் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, மறியல் கைவிடப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai