சுடச்சுட

    

    ஆயக்காரன்புலம் நடேசனார் அரசுப் பள்ளி நல்லாசிரியருக்கு பாராட்டு விழா

    By DIN  |   Published on : 11th September 2016 04:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் நடேசனார் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். கருணாநிதிக்கு, தமிழக அரசின் நல்லாசிரியர் விருது அண்மையில் வழங்கப்பட்டது.
    இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், நல்லாசிரியர் விருது பெற்ற எஸ். கருணாநிதிக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
    விழாவுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் மு. வேதரெத்தினம் தலைமை வகித்தார்.
    விழாவில், இதே பகுதியைச் சேர்ந்தவரும் (ஆயக்காரன்புலம்), விருது பெற்ற ஆசிரியர் கருணாநிதியின் முன்னாள் மாணவரும், தெலங்கானா மாநில, ஹைதராபாத் கனிம மற்றும் சுரங்கங்கள் நிறுவன மேலாண் இயக்குநருமான ஐஏஎஸ் அதிகாரி கு. இளம்பரிதி பேசியது:
    அரசுப் பள்ளிகளில் தியாக உணர்வோடு பணியாற்றும் ஆசிரியர்களால் தான், கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி பெறமுடியும். அந்த வகையில், விருதுபெற்ற ஆசிரியரின் பணி சிறப்பாக இருந்ததால் தான் நானும் உயர முடிந்தது என்றார்.
    விழாவுக்கு, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ந. அரிகிருட்டிணன், துணைத் தலைவர் த. சிவானந்தம், பொருளாளர் ஏ.கே. ஜெகநாதன், ஊராட்சித் தலைவர் கி. வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்கள், சுற்று வட்டாரப் பகுதி பள்ளிகளின் ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பல தரப்பினர் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai