Enable Javscript for better performance
கத்தியால் குத்துப்பட்ட தம்பி சாவு: அண்ணன் கைது- Dinamani

சுடச்சுட

    

    நாகப்பட்டினம் அருகே கத்தியால் குத்துப்பட்ட தம்பி இறந்தார். இதுதொடர்பாக, அவரது அண்ணனை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
    நாகை அருகேயுள்ள அக்கரைப்பேட்டை, நடுத்தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகன் ஜோதிவேல் (26). நாகை அருகே சால்ட் ரோடு, சுனாமி குடியிருப்பு காமராஜர் நகரில் வசிப்பவர் கணேசன் மகன் ஜெயபால் (36). இருவரும் சகோதரர்கள். ஜெயபால் தனது மனைவியை பிரிந்து வாழ்கிறார். எனவே குடித்துவிட்டு அடிக்கடி பணம் கேட்டு ஜோதிவேலை தொந்தரவு செய்வாராம்.
    இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி குடிபோதையில் வந்த ஜெயபால், ஜோதிவேலிடம் பணம் கேட்டுள்ளார். பணம் தர மறுத்ததையடுத்து, கோபமடைந்த ஜெயபால் கத்தியால் ஜோதிவேலை குத்தியுள்ளார். இதில் காயமடைந்த அவர், நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அங்கு அவர் வெள்ளிக்கிழமை இறந்தார்.
    இதுகுறித்து ஜோதிவேல் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையல், நாகை நகரப் போலீஸார் வழக்குப் பதிந்து ஜெயபாலை கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai