சுடச்சுட

  

  கோகோ சாகுபடி தொழில்நுட்பங்கள்: மூன்று நாள் பயிற்சி நிறைவு

  By DIN  |   Published on : 11th September 2016 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நீடாமங்கலம், வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கோகோ சாகுபடி தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற மூன்று நாள் பயிற்சி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
  பயிற்சியில் இரண்டாம் நாள் ஆவிக்கோட்டை கிராமத்தில் கோகோ பயிரிட்டுள்ள விவசாயிகளின் தோட்டத்திற்கு நேரிடையாக அழைத்துச் சென்று கோகோவில் நடவு முறை, கவாத்து செய்தல், உர மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் அறுவடைக்குப் பின்சார் தொழில்நுட்பங்கள் பற்றி முனைவர் ரெ. பாஸ்கரன் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் முனைவர் வெ. சிவக்குமார் உதவி பேராசிரியர் (தோட்டக்கலை) ஆகியோர்களால் செயல் விளக்கத்துடன் பயிற்சியளிக்கப்பட்டது. நிறைவு நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ரெ. பாஸ்கரன் வரவேற்றார். திருவாரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் க. மயில்வாகனன் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
  மேலும் பெரியகுளம், தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நறுமணமூட்டும் மற்றும் மலைத் தோட்டப் பயிர்த்துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் பி. ஜான்சி ராணி கலந்து கொண்டு கோகோ சாகுபடி பற்றி விரிவாகப் பயிற்சியளித்து விவசாயிகளின் சந்தேகங்களை நிவர்த்தி செய்தார். உதவிப் பேராசிரியர் (தோட்டக்கலை) முனைவர் வெ.சிவக்குமார் நன்றி கூறினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai