சுடச்சுட

  

  ஆய்வுமன்னார்குடி,செப்.10: மன்னார்குடி அருகே பெருகவாழ்ந்தான் கிராமத்தில் இயந்திரம் மற்றும் ஆள்கள் மூலம் நேரடி நெல் விதைப்புப் பணியை சனிக்கிழமை தமிழக வேளாண்மைத்துறை இயக்குநர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  பெருகவாழ்ந்தான் கிராமத்தில் முன்னோடி விவசாயி மன்னார்குடி காவிரி எஸ்.ரெங்கநாதனுக்கு சொந்தமான பண்ணைவயலில் இயந்திரம் மூலம் நேரடி நெல் விதைப்புப் பணி 16 ஏக்கரில் நடைபெற்றது.
  இதை தமிழக வேளாண்மைத்துறை இயக்குநர் தெட்சிணாமூர்த்தி தொடங்கி வைத்துப் பேசுகையில், சம்பா தொகுப்புத் திட்டத்திற்கு திருவாரூர் மாவட்டத்திற்கு பல்வேறு மாநில திட்டங்களுக்காக ரூ.25.70 கோடி ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது
  என்றார்.
  பின்னர் நொச்சியூர் கிராமத்திற்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் 10 ஏக்கரில் ஆள்கள் மூலம் நேரடி நெல் நடவு செய்யப்பட்டுள்ள வயல்களையும், உழவுப் பணிகளையும் பார்வையிட்டு விவசாயிகளிடம் விவரங்களைக்
  கேட்டறிந்தார்.
  கோவை வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி முன்னிலை வகித்தார். இதில் முன்னோடி விவசாயிகள் காவிரி எஸ்.ரெங்கநாதன், சத்தியநாராயணன், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் க.மயில்வாகனன், துணை இயக்குநர் த.மதியழகன். தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநர் வி.கணேசன், கோட்டூர், முத்துப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குநர்கள் கலந்து
  கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai