சுடச்சுட

  

  மன்னார்குடியில் இந்து முன்னணி சார்பில் 22 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு பாமணியாற்றில் சனிக்கிழமை விசர்ஜனம் செய்யப்பட்டது.
  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் 22 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
  இந்த விநாயகர் சிலைகளை அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எடுத்து வரப்பட்டு ராஜகோபால சுவாமி கோயில் அருகில் ஒன்றாக நிறுத்தப்பட்டன.
  இந்து முன்னணி நகரத் தலைவர் வை.ரமேஷ் தலைமை வகித்தார்.
  மாவட்டச் செயலர் ப.ராமராஜசேகர், மாவட்ட செய்தி தொடர்பாளர் பொன்.நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி மாநிலச் செயலர் ம.ராஜா கலந்துகொண்டார்.
  ஆன்மிக ஆர்வலர் வெ.கருணாநிதி விநாயகர் சிலைகள் ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார்.
  விநாயகர் சிலைகளின் ஊர்வலம் ராஜகோபால சுவாமி கோயிலின் நான்கு பிரகார வீதிகள், மேல ராஜவீதி, பெரியகடைத் தெரு, காந்திஜி சாலை, மூன்றாம்தெரு, புதுத்தெரு வழியாக கீழப்பாலம் பாமணியாற்றை அடைந்து பின்னர் விநாயகர் சிலைகளை நீரில் கரைத்தனர்.
  பாஜக மாவட்டச் செயலர் வி.கே.செல்வம், நகரத் தலைவர் பால.பாஸ்கர், சக்திவேற்கோட்டம் தர்மகர்தா என்.டி.ராஜசேகர். இந்து முன்னணி நகரச் செயலர் எஸ்.மாரிமுத்து, துணைத் தலைவர் கே.முருகேசன், ஒன்றியச் செயலர் ஆர்.ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai