சுடச்சுட

  

  முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலப் பாதை: மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஆய்வு

  By DIN  |   Published on : 11th September 2016 04:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முத்துப்பேட்டையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
  உப்பூர், தில்லைவிளாகம், ஆலங்காடு, ஜாம்பவானோடை, சின்னாங்கொல்லை, மருதங்காவெளி உட்பட 19 இடங்களில் கடந்த செப்.5-இல் விநாயகர் சதுர்த்தி அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு தினசரி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
  மதியம் 2 மணிக்கு ஜாம்பவானோடை வடகாடு சிவன் கோயிலிலிருந்து தொடங்கும் ஊர்வலம் வைரான் சோலை, ஜாம்பவானோடை தர்ஹா, மேலக்காடு, கோரை ஆற்றுப்பாலம் பகுதி வழியாக முத்துப்பேட்டை ஆசாத் நகர் பாலம் வழியாகச் சென்று அங்கிருந்து திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பேருந்து நிலையத்தில் அனைத்து சிலைகளும் வருவாய்த் துறையினரால் ஒருங்கிணைக்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு செம்படவன்காட்டில் உள்ள பாமணி ஆற்றில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படும். திருச்சி சரக காவல்துறை தலைவர் வரதராஜ் தலைமையில், தஞ்சை சரக துணைத்தலைவர் ஜி.செந்தில்குமார், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உள்ளிட்ட காவல்துறை அதகாரிகள் ஊர்வலம் செல்லும் பாதைகளை சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
  இதில் கடந்தகால நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென காவல்துறை தலைவர் அறிவுறுத்தினார். முத்துப்பேட்டை, ஜாம்பவானோடை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலைய பகுதிகளில் போலீஸார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.
  இந்நிலையில், விநாயகர் ஊர்வலப் பாதுகாப்பிற்காக மத்திய மண்டலத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
  இதுகுறித்து பா..ஜ.க. மாநில பொதுச் செயலர் கருப்பு (எ) முருகானந்தம் விடுத்துள்ள அறிக்கையில், 24-வது ஆண்டாக வெற்றி விநாயகர் ஊர்வலமாக கொண்டாடி வருகிறோம். இந்த ஊர்வலம் இந்து மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்கு உதாரணமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஊர்வலத்தில் அனைவரும் திரளாகப் பங்கேற்று ஊர்வலம் சிறப்பாக நடைபெற அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai