சுடச்சுட

    

    திருக்குவளை அருகே கிராம நிர்வாக அலுவலரிடம் குடிபோதையில் தகராறு செய்தவர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர்.
    திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி கிராம நிர்வாக அலுவலர் உலகேஷ்வரன் (36).
    இந்நிலையில், வல்லம் அருகேயுள்ள உரங்குடியைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் வீரமணி, குடிபோதையில் எட்டுக்குடி கிராம நிர்வாக அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தாராம். அங்கு பணியில் இருந்த உலேகேஷ்வரன், அவரது உதவியாளர் பக்கிரிசாமி இருவரையும் வீரமணி திட்டியதுடன், கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து உலகேஷ்வரன் அளித்த புகாரின் பேரில், வீரமணி மீது திருக்குவளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai