சுடச்சுட

  

  அங்காடிகள் முழு கணினி மயமாக்கல் திட்டம்: ஆதார் அட்டை நகல், செல்லிடப்பேசி எண்களை சமர்ப்பிக்க வேண்டுகோள்

  By DIN  |   Published on : 12th September 2016 07:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட அங்காடிகள் முழு கணினிமயமாக்கல் திட்டத்தை 100 சதவீதம் செயல்படுத்த ஏதுவாக பொதுமக்கள் தங்கள் ஆதார் அட்டை நகல் மற்றும் செல்லிடப்பேசி எண்களை அங்காடிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து அவர் கூறியிருப்பது:
  நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்காடிகளிலும் அங்காடிப் பணியாளர்கள் மூலம் முழு கணினி மயமாக்கல் திட்டம் ஆக. 8 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  இத்திட்டத்தை அனைத்து அங்காடி பணியாளர்களும் முழுமையாகச் செயல்படுத்தும் வகையில் அங்காடியில் உள்ள வழங்கல் பதிவேட்டின்படி குடும்ப அட்டை எண், குடும்ப அட்டை வகை, அலகு போன்ற விவரங்கள் அனைத்தும் விற்பனை இயந்திரத்தில் ஆக. 16 ஆம் தேதி வரை 58 சதவீதம் பேர் பதிவு செய்துள்ளனர்.
  பொதுமக்கள் தங்கள் செல்லிடப்பேசி எண் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை அங்காடி பணியாளர்களிடம் வழங்கி, நாகை மாவட்டத்தில் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இத்திட்டத்தின் வாயிலாக 100 சதவீதம் பணியை முடிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai