சுடச்சுட

    

     குத்தாலம் வட்டம், கங்காதரபுரம் ஊராட்சியில் கோட்டாட்சியரின் மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    முகாமுக்கு வட்டாட்சியர் இந்துமதி தலைமை வகித்தார். ஒன்றியக்குழுத் தலைவர் என். தமிழரசன் முன்னிலை வகித்தார். மயிலாடுதுறை கோட்டாட்சியர் சுபாநந்தினி, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று தகுதியான பயனாளிகள் 59 பேருக்கு வீட்டுமனைப் பட்டா, 16 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை, 1 பயனாளிக்கு முதியோர் ஓய்வூதியம், 7 பயனாளிகளுக்கு புதிய ரேஷன் கார்டு, 2 பேருக்கு சிங்சல்பேட் உரம் ஆகியவற்றை வழங்கிப் பேசினார்.
    இதில் முதியோர் ஓய்வூதியம், குடும்ப அட்டை பெயர் சேர்ப்பு மற்றும் பெயர் நீக்கம், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், பட்டா மாற்றம் என மொத்தம் 108 மனுக்கள் பெறப்பட்டன. தகுதியுடைய 62 மனுக்கள் உடன் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தகுந்த ஆவணங்கள் இல்லாத 46 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
    இதில் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் விஜயராகவன், வட்டார மருத்துவ அலுவலர் சவுரிராஜன், வட்ட வழங்கல் அலுவலர் ராகவன், வேளாண்மை அலுவலர் கண்ணன், மண்டல துணை வட்டாட்சியர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஊராட்சித் தலைவர் செல்வராஜ் வரவேற்றார்.   வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai