சுடச்சுட

    

    சீர்காழி அருகே நெடுஞ்சாலையின் நடுவில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சீர்காழியை அடுத்த பழையபாளையம் கிராமத்தில் பழையார் செல்லும் நெடுஞ்சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சாலை வழியாகத்தான் தினந்தோறும் பழையார் மீன்பிடி துறைமுகத்தின் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள், இறால், நண்டு வகைகள் வாகனத்தின் மூலம் பிற மாநிலங்களுக்கு  கொண்டு செல்லப்படுகின்றன.
    மேலும், பழையார், தற்காஸ், புதுப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் சீர்காழிக்கு வந்து செல்ல மேற்கண்ட சாலை தான் பிரதான சாலையாகும்.
    போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சாலையின் நடுவில் பெரிய பள்ளம்  ஏற்பட்டுள்ளது. பல மாதங்களாக பள்ளம் ஏற்பட்டு நெடுஞ்சாலைத்துறையினர்  சீரமைக்காத காரணத்தால் அந்த பள்ளத்தில் அப்பகுதியைச் சேர்ந்த  பொதுமக்கள் மரக்கிளையை வைத்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு செய்துள்ளனர்.
    எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் பழையபாளையம் பகுதி சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai