சுடச்சுட

    

    தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பேரவை(செனட்) உறுப்பினராக மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர் முனைவர் துரை. குணசேகரன்  தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இதற்கான அறிவிப்பை, தமிழக ஆளுநரின் முதன்மைச் செயலர்  ரமேஷ் சந்த் மீனா அண்மையில் வெளியிட்டுள்ளார். 3 ஆண்டுகள் பேரவை உறுப்பினராக துரை. குணசேகரன் பொறுப்பு வகிப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
    தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராகத் தேர்வு  செய்யப்பட்டுள்ள முனைவர் துரை. குணசேகரனுக்கு, பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாஸ்கரன், நாட்டுப்புறவியல்  துறைத் தலைவர் முனைவர் சி. சுந்தரேசன், ஏவிசி கல்லூரியின் முன்னாள் தலைவர் பி.என். ரெத்தினகுமார் மற்றும் கல்லூரி  பேராசிரியர்கள், தமிழாய்வு மாணவர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai