சுடச்சுட

    

    சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் 80 பேர் ஒருவாரக் காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து, வேதாரண்யத்தில் திமுகவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும்,  திமுக மாவட்ட அவைத் தலைவருமான மா. மீனாட்சிசுந்தரம்  தலைமை வகித்தார்.
    கட்சியின் ஒன்றியச் செயலாளர்கள் ச. குமரவேல், மா. சிங்காரவேல், நகரச் செயலர் மா.மீ. புகழேந்தி, நகர்மன்ற  முன்னாள் துணைத் தலைவர் சி. சாகுல்ஹமீது, வழக்குரைஞர்  பாரிபாலன், ஊராட்சித் தலைவர் ஆர். துரைராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai