சுடச்சுட

  

  திருமணத்துக்கு மணமக்களின் வயதுச் சான்றிதழ் அவசியம்: ஆட்சியர்

  By DIN  |   Published on : 12th September 2016 07:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகை மாவட்டத்தில் திருமண மண்டபங்கள், கோயில்கள், பள்ளிவாசல், கிறிஸ்தவ ஆலயங்கள் ஆகியவற்றில் நடைபெறும் திருமணங்களுக்கு மணமக்களின் வயதுச் சான்றிதழ் பெறவேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து அவர் கூறியிருப்பது: நாகப்பட்டினம்  மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்கள், கோயில்கள், பள்ளிவாசல், கிறிஸ்தவ ஆலயங்கள் ஆகியவற்றில் நடைபெறும் அனைத்து திருமணங்களுக்கும் மணமகளுக்கு 18 வயதும், மணமகனுக்கு 21 வயதும்  பூர்த்தி அடைந்ததற்கான வயதுச் சான்றுகள் பெற்று, திருமண இடத்தை முன்பதிவு செய்ய வேண்டும். தவறினால் இடத்தின் உரிமையாளர்கள் மீது குழந்தை திருமண தடைச் சட்டம் 2006 மற்றும் விதிகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai