சுடச்சுட

  

  நாகப்பட்டினத்தில் சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சார்பில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் விவசாயக் கண்காட்சி சனிக்கிழமை (ஆக. 20) நடைபெற உள்ளது என அதன் திட்ட ஒருங்கிணைப்பாளர் அ. அனுராதா தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சார்பில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் விவசாயக் கண்காட்சி ஆக. 20 ஆம் தேதி காலை 9 மணியளவில் நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற உள்ளது.
  இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தொடங்கி வைக்கிறார்.
  நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இயக்குநர்கள், வேளாண்மைத் துறை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளின் அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். பல்வேறு நிறுவனங்களின் கருத்துக் காட்சி அரங்குகளும், செயல் விளக்கங்களும் நடைபெற உள்ளது. கண்காட்சியில் நாகை மாவட்ட விவசாயிகள் பங்கேற்று பயனடைய வேண்டும் என அவர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai