சுடச்சுட

  

  நாகப்பட்டினம் கிருஷ்ணன் கோயிலில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி உத்ஸவத்தை முன்னிட்டு வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.
  நாகப்பட்டினம் கிருஷ்ணன் கோயிலில் கண்ணன் பிறப்பு உத்ஸவம் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
  நிகழாண்டு உத்ஸவத்தை முன்னிட்டு வியாழக்கிழமை காலை கிருஷ்ணன் கோயிலில் கொடியேற்றம் நடைபெற்றது.
  விழா நாள்களில் தினமும் காலை வேளையில் பல்லக்கு சேவை நடைபெறுகிறது. பின்னர், மாலையில் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
   ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ சத்யபாமா நாச்சியாருடன் பல்லாக்கு சேவை ஆக. 23 ஆம் தேதி நடைபெறுகிறது. அதேபோல் ஆக. 25 ஆம் தேதி வெண்ணைத்தாழி சேவையும், 26 ஆம் தேதி திருத்தேர் வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
  உத்ஸவ நாள்களில் காலை, மாலை வேளைகளில் வேதபாராயணம், நாலாயிர திவ்யபிரபந்த சேவை நடைபெற உள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தார் செய்துள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai