சுடச்சுட

  

  கீழ்வேளூர் ஒன்றியம், கோயில் கண்ணாப்பூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்புத் திட்ட  முகாமில் ரூ. 10.20 லட்சம் மதிப்பிலான உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
  கீழ்வேளூர் ஒன்றியம், கோயில் கண்ணாப்பூர் ஊராட்சியில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தலைமை வகித்தார்.
  மக்கள் தொடர்பு முகாமில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, மருத்துவத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, அரசின் திட்டங்கள் குறித்தும் அதனை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் துறைசார்ந்த உயர் அலுவலர்கள் பொதுமக்களுக்கு விளக்கமளித்தனர்.
  முகாமில் மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி பேசியது: மக்கள் தொடர்பு முகாம்களில் மக்களின் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவைகளை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், துறைசார்ந்த  திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடியாக மக்களுக்கு விளக்கமளிக்கின்றனர். இதேபோல், வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் அம்மா திட்ட முகாம்கள் நடத்தப்படுகின்றன. அந்தந்த கிராம மக்கள் தங்களுக்குத் தேவையான சாதிச்சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று போன்றவற்றுக்காக கோரிக்கை மனுக்களை அளித்து அன்றைய தினமே பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
  ஏற்கெனவே 96 மனுக்கள் பெறப்பட்டு அதில் 81 மனுக்கள் ஏற்கப்பட்டு, அவற்றுக்கு நலத் திட்ட உதவிகள் கோயில் கண்ணாப்பூர் முகாமில் வழங்கப்பட்டன. மேலும் 15 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.
  முகாமில் வருவாய்த்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 55 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணை, 30 பயனாளிகளுக்கு உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இறப்பு மற்றும் திருமண நிதியுதவி, வேளாண்மைத் துறையில் சார்பில் 2 பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருள்கள், கால்நடை பாதுகாப்புத் துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு தாது உப்பு கலவை, தோட்டக்கலைத் துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு விதை மாதிரிகள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் ரூ. 10.20 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டன.
  நிகழ்ச்சியில் கீழ்வேளூர் ஒன்றியக்குழுத் தலைவர் முருகானந்தம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் சிவா, வட்டாட்சியர் அமுதவிஜயரங்கன், ஊராட்சி மன்றத் தலைவர் அன்பழகன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai