சுடச்சுட

  

  "மயிலாடுதுறை கோட்டத்தில் ரூ. 4.35 கோடியில் ஆறு, வாய்க்கால்கள் சீரமைப்பு'

  By DIN  |   Published on : 12th September 2016 07:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காவிரி வடிநிலப் பகுதி, மயிலாடுதுறை கிழக்கு கோட்டத்தில் உள்ள ஆறுகள், வாய்க்கால்களை தூர்வாரவும், நீர்த்தேக்கிகளை சரிசெய்யவும் ரூ. 4.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது என்று பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) மயிலாடுதுறை கிழக்கு கோட்டச் செயற்பொறியாளர் ப. பாலசுப்பிரமணியன் கூறினார்.
  இதுகுறித்து ப. பாலசுப்பிரமணியன் வியாழக்கிழமை கூறியது:
  நீர் மேலாண்மை மற்றும் வெள்ளப் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஆண்டுதோறும் ஆறுகள், வாய்க்கால்  தூர்வாரும் பணிகளும், ஆறுகள், வாய்க்கால்களின் குறுக்கே  கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்கிகள் சீர் செய்யப்படுவதும் வழக்கம். இதன்படி, ஆடுதுறை, குத்தாலம், மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், செம்பனார்கோயில், பொறையாறு  பகுதிகளை உள்ளிடக்கிய காவிரி வடிநிலப்பகுதி, மயிலாடுதுறை கிழக்கு கோட்டத்தில் 180 கி.மீ. நீளத்துக்கு 50 ஆறுகள் மற்றும் வாய்க்கால்கள் ரூ. 1.68 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு வருகின்றன.
  இதேபோல், ரூ. 2.46 கோடி மதிப்பீட்டில் 35 கட்டுமானப் பணிகளும் ரூ. 21 லட்சம் மதிப்பீட்டில் அடைப்புப் பலகைகள் சீரமைப்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
  உதவிப் பொறியாளர்கள் மேற்பார்வைகளில் நடைபெறும்  இப்பணிகள் அனைத்தும் விரைவில் நிறைவு பெறும். விடுபட்டப் பணிகள் 2017 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும் எனவும் ப. பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai