சுடச்சுட

  

  வேதாரண்யம் பகுதியில் கடலில் இணையும் மானங்கொண்டான் (வானம்கொண்டான்) ஆற்றை தூர்வாரி முக்கிய இடங்களில் தடுப்பணைகள் அமைத்து தண்ணீரை சேமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
  வேதாரண்யத்தில் குடிக்காணி மற்றும் குத்தகை சாகுபடிதாரர்கள் விவசாயப் பாதுகாப்புச் சங்கத்தின் சிறப்பு செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
  தமிழ்த்தென்றல் வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு அமைப்பின் தலைவர் சா. பாஸ்கர் தலைமை வகித்தார்.
  நிர்வாகிகள் வேதநாயகம், சதாசிவம், நடராஜன், முருகையன், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் செயலர் கலிதீர்த்தான், நிர்வாகிகள் புயல் குமார், தமிழ்மணி உள்ளிட்டோர் பேசினர்.
  வேதாரண்யம் பகுதியில் வீடுகளுக்கு மின் இணைப்புப் பெற ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு புதிய நடைமுறையை ரத்து செய்து, பழைய நடைமுறையில் மின் இணைப்புகளை வழங்க வேண்டும்.
  வேதாரண்யம் நகராட்சியின் எல்லைக்குள்பட்ட இடங்களில் முக்கிய வடிகால் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வெள்ளக்காலத்துக்குள் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் அரசை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai