Enable Javscript for better performance
மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நாகப்பட்டினத்தில், தமிழ்நாடு மின்சாரத் தொழிலாளர் சம்மேளனம் சார்பில்  வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஆர்ப்பாட்டத்துக்கு நாகை கோட்டத் தலைவர் ஜி. வீராசாமி தலைமை வகித்தார். 10 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்த விநியோக பகுதிகளை சீர்படுத்த வேண்டும். தொய்வாக இருக்கும் உயர் அழுத்த, தாழ்வு அழுத்த மின்பாதைகளை பராமரிக்க வேண்டும்.
    மின்பாதைகளுக்கு அருகில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும். பழுதான மின் கம்பங்களை உடன் மாற்றி அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai