சுடச்சுட

  

  கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலரைக் கண்டித்தும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மயிலாடுதுறையில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  மயிலாடுதுறை தொடக்கக் கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர், பள்ளி வேலை நாள்களில் பணியிலிருக்கும் ஆசிரியர்களை, அலுவலகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வற்புறுத்தல் செய்வதாகவும், இதனால் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
  இதைக் கண்டித்து, மயிலாடுதுறை உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை மாவட்டத் தலைவர் பா. புகழேந்தி  தலைமை வகித்தார். மாவட்ட துணைத்  தலைவர்கள் த. செல்வம், தெ. அன்பழகன், ரா. தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் கூட்டணியின் நாகை மாவட்டச் செயலர் எம். காந்தி தொடக்க உரையாற்றினார்.
  இதில் மாவட்ட துணைச் செயலாளர்கள் நா. சத்தியசீலன், எம். கோடி, ஏ. ராஜம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் செள. ராமலிங்கம், மயிலாடுதுறை வட்டாரத் தலைவர் டி. சுகுணா மற்றும் தமிழ்நாடு ஆரம்0பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆசிரியர்கள், பல்வேறு அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai